மருந்துக்கு கட்டுப்படாத காசநோய்க்கு எதிரான போராட்டம்: தென் ஆப்ரிக்காவின் வெற்றியில் இருந்து இந்தியா என்ன கற்க வேண்டும்?

மருந்துக்கு கட்டுப்படாத காசநோய்க்கு எதிரான போராட்டம்: தென் ஆப்ரிக்காவின் வெற்றியில் இருந்து இந்தியா என்ன கற்க வேண்டும்?
X

ஜோஹனஸ்பெர்க், கேப்டவுன், கெய்லிட்சா (தென் ஆப்பிரிக்கா): கடந்த 2017 ஜூலையில், இரு குழந்தைகளின் ஒரே தாயான 40 வயது நோலுட்வே மபாண்டிலா, வீட்டிலேயே சரிந்து விழுந்தார். இது, அவரது உயிரை காப்பாற்றுவதில் முடிந்தது. ஆம்புலன்ஸ் விரைந்து வந்து, அவரை அருகேயுள்ள அரசு சமூக சுகாதார மையத்தில் சேர்த்தது; அங்கு அவருக்கு மருந்துக்கு கட்டுப்படாத காசநோய் (MDR-TB) இருப்பது கண்டறியப்பட்டது. பரிந்துரைத்த பெயரை போல ரிபாம்பிசின் போன்ற முதன்மையான மருந்துகள் பொதுவாக எம்.டி.ஆர். -டிபிக்கு வேலை செய்யாது; வழக்கமான காசநோயில் ஆறு மாதங்களில் குணமடைவது, இதில் இரண்டு வருடங்களுக்கு மேல் ஆகும்.

இரு குழந்தைகளின் ஒரே தாயான 40 வயது நோலுட்வே, எம்.டி.ஆர்.-டிபிக்கு பெடாகுலைன், டிலாமனிட் மருந்தை பெற்று உட்கொண்ட பிறகு முழுமையாக குணமாகலாம் என்ற நம்பிக்கையை கொண்டுள்ளார். அந்த நோய்க்கு முன்பாக உள்ள தனது புகைப்படத்தை அவர் காட்டுகிறார்.

தென் ஆப்பிரிக்காவின் மிகப்பெரிய நகரான கேப் டவுனின் தென்கிழக்கில் 30 கி.மீ., தொலைவில் உள்ள கெய்லிட்சா பகுதியில் வசிக்கும் மபாண்டிலா, அதுவரை ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்; அங்கு அவருக்கு காசநோய் பரிசோதனை நடக்கவில்லை. அரசு மருத்துவமனையில் அவருக்கு எம்.டி.ஆர்.-டிபி சிகிச்சையை தொடங்கிய சுகாதார ஊழியர்கள், மபாண்டிலாவுக்கு ஆறு மாதங்களுக்கு ஊசி மூலம் மருந்துகளை செலுத்தினர். இதனால் அவருக்கு பக்க விளைவுகளை உருவாக்கி, காலில் உணர்வின்மை, காது கேளாமை மற்றும் சிறுநீரகக் குறைபாடு போன்றவை ஏற்பட்டன.

பின்னர் மபாண்டிலாவுக்கு, 40 ஆண்டுகள் கடும் முயற்சியில் காசநோய்க்கு கண்டுபிடிக்கப்பட்ட புதிய மருந்து பெடாகுலைன், தென் ஆப்ரிக்க சுகாதாரத்துறை தேசிய காசநோய் கட்டுப்பாட்டு திட்டம் (NTCP) மூலம் வழங்கப்பட்டது. 2015ஆம் ஆண்டு தென் ஆப்ரிக்க சுகாதாரத்துறையின் என்.டி.சி.பி. மூலம், பக்க விளைவுகளை சந்தித்த மபாண்டிலா போன்ற எம்.டி.ஆர். காசநோயின் கடும் வடிவமான மருந்துக்கு கட்டுப்படாத காசநோய் (XDR-TB) உள்ளவர்களுக்கு, மருந்துகள் கிடைக்க வழிவகை செய்யப்பட்டது.

கடந்த 2017 நவம்பரில், சர்வதேச மனிதாபிமான உதவி அமைப்பான மெடிசின்ஸ் சான்ஸ் பிரண்டியர்ஸ் (MSF) இருந்து மற்றொரு புதிய காசநோய் மருந்தான டிலாமனிடினை மபாண்டிலா பெற்றார். இந்த புதிய மருந்துகள் இன்னும் சாதாரணமாக கிடைக்கவில்லை - உலகில் உள்ள 5,58,000 எம்.டி.ஆர்.- டிபி நோயாளிகளில், ஆகஸ்ட் 2018 வரை 24,000க்கும் அதிகமானோர் மட்டுமே பெடாகுலைனையும், 2,020 பேர் மட்டுமே டிலாமாமனிட் மருந்தை பெற்றுள்ளனர்.

எச்.ஐ.வி. மற்றும் காசநோயாளியான மபாண்டிலாவுக்கு, ஏறத்தாழ ஒருமாதம் மருத்துவமனையில் இருந்த பிறகு நம்பிக்கை பிறக்கிறது. இப்போது சிகிச்சை தொடங்கி ஓராண்டுக்கு பின், முழுமையாக மீண்டு வருவோம் என்ற நம்பிக்கை கொண்டிருக்கிறார். அவரது கதை, உலகளாவிய எம்.டி.ஆர். டிபி நோயாளிகளுக்கு நம்பிக்கையூட்டும் ஒரு கலங்கரை விளக்கம் ஆகும்.

2014 ஆண்டு வரை, தென் ஆப்பிரிக்காவில் இரு எம்டிஆர்-டிபி நோயாளிகளில் கிட்டத்தட்ட ஒருவருக்கு வெற்றிகரமாக சிகிச்சை அளிக்கப்படவில்லை என்று, 19,000 நோயாளிகளிடம் ஆய்வு நடத்தி தி லான்செட் சுவாச மருத்துவ இதழ் 2018 ஜூலையில் வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. நாட்டில் 10 எம்.டி.ஆர்.டிபி நோயாளிகளில் இருவர், 18 முதல் 24 மாத சிகிச்சை காலத்தில் இறந்துவிட்டது ஆய்வில் தெரிய வந்தது.

மருந்துக்கு கட்டுப்படாத காசநோய்க்கு சிகிச்சை அளித்து, நோயாளிகளை மையப்படுத்திய முயற்சிகள் மற்றும் தெம் ஆப்பிரிக்காவை வெற்றிகரமாக செயல்பாடுகள், மருந்துக்கு கட்டுப்படாத காசநோய்க்கான சிகிச்சையில் அந்நாட்டை ஒரு முன்னணி உதாரணமாக திகழச் செய்துள்ளது.

மருந்துக்கு கட்டுப்படாத டிபிக்கு எதிரான தென் ஆப்பிரிக்காவின் வெற்றிகளை அறிந்து கொள்ள அங்குள்ள அர்சு அதிகாரிகள், மருத்துவர்கள், டிபி நோயாளிகள் மற்றும் ஆலோசனைக் குழுவினரை இந்தியா ஸ்பெண்ட் பேட்டி கண்டது. தென் ஆப்பிரிக்காவில் காசநோயாளிகளின் மரணங்களைக் குறைக்க, ஆதார அடிப்படையிலான கொள்கைகளுடன் கூடிய அரசியல் உறுதிப்பாடு உதவியாக இருந்து, இந்தியா போன்ற மருந்துக்கு கட்டுப்படாத காசநோயாளிகளை கொண்ட நாடுகளுக்கு ஒரு முன்மாதிரியாக விளங்குகிறது.

உலகளவில் இந்தியாவில் மருந்துக்கு கட்டுப்படாத காசநோயாளிகளின் எண்ணிக்கை அதிகம் உள்ள நிலையில், இந்தியா ஸ்பெண்ட் வெளியிட்ட இத்தொடரின் முதல் பகுதியில், இந்தியாவின் மருந்துக்கு கட்டுப்படாத காசநோயாளில் 2.2% க்கும் மேலானவர்கள், 2018 நவம்பர் வரை பெடாகுலைன் மருந்தை எப்படி பெற்றனர் என்பதை விவரித்தது. இதன் இரண்டாம் பகுதியில் தென் ஆப்ரிக்க கொள்கையோடு இந்தியாவை ஒப்பிட்டு அலசுகிறோம்.

மருந்துக்கு கட்டுப்படாத காசநோய்க்கான வழக்கமான மருந்துகள் நோயாளிக்கு பக்கவிளைவை ஏற்படுத்துகின்றன

மபாண்டிலாவை போல், மற்றொரு எம்.டி.ஆர். காசநோயாளியான புமேஸா திஸிலேவுக்கும், ஊசிமூலம் செலுத்தப்பட்ட மருந்தால் பக்கவிளைவுகளை சந்தித்தார். 2010 ஆம் ஆண்டில் அவருக்கு காசநோய் கண்டறியப்பட்டபோது கேப்டவுன் பல்கலைக்கழக மாணவியாக இருந்தார். மருந்துக்கு கட்டுப்படாத காசநோய் கண்டறியப்பட்ட அவருக்கு விரைவான நோயறிதல் சிகிச்சை கிடைக்கவில்லை என்பதால், வழக்கமான காசநோய்க்கான சிகிச்சையும் வேலை செய்யாத நிலையில் அவருக்கு எம்.டி.ஆர். காசநோய் சிகிச்சை தரப்பட்டது. பின்னர் நாளொன்றுக்கு 20 மாத்திரைகள், ஒரு ஊசி என்று அவருக்கு ஆறு மாதங்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது.

சிகிச்சையின் போது ஒருநாள் இரவில் எழுந்த புமேஸா திஸிலே, தனக்கு காது கேட்கவில்லை என்பதை உணர்ந்தார். உட்செலுத்தப்பட்ட எம்.டி.ஆர். காசநோய்க்கான கனமைசின் என்ற மருந்து, அவரது இரண்டு காதுகளையும் செவிடாக்கியது. "அதற்கு முன், எந்த பக்க விளைவுகள் பற்றியும் எனக்கு ஆலோசனை தரப்படவில்லை. டிபி சிகிச்சை என் காதை செவிடாக்கும் என்று நான் அறிந்திருக்கவில்லை, "என்று இந்தியா ஸ்பெண்டிடம் அவர் கூறினார். "எனது காது கேளாமை குறித்து செவிலியரிடம் நான் கூறியபோது, அவர் வருத்தம் தெரிவித்தார்; ஆனால் தன்னால் வேறு எதுவும் செய்ய முடியாது என்றார்” என திஸிலே தெரிவித்தார். கொடுமை என்னவென்றால், திஸிலேவுக்கு எக்ஸ்.டி.ஆர். காசநோய் இருப்பதும், கனமைசின் எதிர்ப்பு இருந்ததும், அதனால் அந்த மருந்து அவருக்கு உதவாமல் காதுகேளாமையை ஏற்படுத்தியதும் தெரிய வந்தது.

காசநோயாளியான மாணவி புமேஸா திஸிலேவுக்கு எம்.டி.ஆர். காசநோய்க்கான மருந்து உட்செலுத்தியதால் பக்க விளைவு ஏற்பட்டு காதுகேளாமை உண்டானது. காசநோயில் இருந்து மீண்டுள்ள அவர், எம்.டி.ஆர். காசநோய்க்கான மருந்துகளால் ஏற்படும் பக்க விளைவுகள் பற்றி விழிப்புணர்வை ஏற்படுத்துகிறது.

2010ஆம் ஆண்டின் அந்த நேரத்தில், தென் ஆப்பிரிக்காவில் எக்ஸ்.டி.ஆர். காசநோய்க்கான சிகிச்சை, அந்நோய் மேலும் பரவுவதை கட்டுப்படுத்தும் நோக்கில் அரசு மருத்துவமனைகளில் மட்டுமே கிடைத்தது. இதனால் நோயாளிகள் தனிப்பட்ட வாழ்க்கை, வேலையில் இருந்து விலகி, இரண்டு ஆண்டுகள் வரை மருத்துவமனையில் தங்கியிருக்க நேரிட்டது. கேப் டவுனில் உள்ள புரூக்ளின் மார்பு மருத்துவமனை உட்பட மூன்று மருத்துவமனைகளில் ஒரு வருடத்திற்கு மேல் திஸிலே செலவிட்டும் அவரது உடல்நிலையில் எந்த முன்னேற்றமும் இல்லை.

“ஒவ்வொரு நாளும் என்னை சுற்றியுள்ள நோயாளிகள் இறப்பதை நான் பார்த்தேன்; சடலங்களை எடுத்து செல்ல தனி வழி கூட இருந்தது” என்றார் அவர். பின்னர், சிகிச்சை வேலை செய்யவில்லை என்று கூறி அவர், எம்.எஸ்.எப்.க்கு பரிந்துரைக்கப்பட்டார்; அங்கு அவருக்கு லைனிசாலிட் மருந்து வழங்கப்பட்டது. எம்.டி.ஆர் மற்றும் எக்ஸ்.டி.ஆர். காசநோயாளிகளுக்கு கடைசியாக இந்த நோய் எதிர்ப்பு மருந்துகள் பயன்படுத்தப்படுகிறது; ஆனால், தென் ஆப்ரிக்க தேசிய காசநோய் தடுப்பு திட்ட (NTCP) அமைப்பிடம் அந்த மருந்து இல்லை. பார்வை தெளிவின்மை, ரத்தசோகை, காலில் உணர்வின்மை போன்ற பக்க விளைவுகளை லைனிசாலிட் கொண்டிருந்தாலும் திஸிலேவின் உடல் நிலையில் மெதுவான முன்னேற்றம் காணப்பட்டது; 2013ல் அவர் குணமடைந்ததாக அவர் அறிவிக்கப்பட்டார்.

தனக்கு சிகிச்சை நடந்து கொண்டிருந்தபோதே, ​​2013 ஆம் ஆண்டில் எம்.எஸ்.எப். இணையதளத்தில் திஸிலே வலைதளத்தை தொடங்கினார், ஊசி மூலம் செலுத்தப்படும் காசநோய்க்கான மருந்துகளின் பக்க விளைவுகளை பற்றி விழிப்புணர்வை ஏற்படுத்தினார்; இது ஊடகங்கள் மற்றும் பிற நோயாளிகளின் கவனத்தை ஈர்த்தது. “எங்களுக்கு வேறு வழி தெரியவில்லை; தற்கொலை செய்து கொள்ளப்போகிறோம் என்றெல்லாம் நோயாளிகளிடம் இருந்து குறுஞ்செய்திகள் எனக்கு வந்தன” என்று கூறிய அவர் “இது வேலை செய்யும்; நீங்கள் குணமடைவீர்கள் என்று கூறினேன்” என்றார். திஸிலே தனது காதுகளில் காதொலி கருவிகளை பொருத்தி, இழந்த கேட்கும் திறனை மீண்டும் பெற்றார். அவர் தனது படிப்பை மீண்டும் தொடர்ந்தார்.

2013 வரை மோசமான சிகிச்சை வெற்றி விகிதங்களை எதிர்கொண்ட தென் ஆப்பிரிக்கா பெடாகுலைனை அறிமுகம் செய்கிறது

தென் ஆப்பிரிக்காவில் 3,22,000 காச நோயாளிகள் உள்ளனர்; இவர்களில் 14,000 பேர் ரிபாம்பிசின் எதிர்ப்பு (ஆர்ஆர்) / எம்டிஆர் காசநோயாளிகள்; மற்றும் 1,92,000 (59%) பேர் மனித நோயெதிர்ப்பு திறன் அழிக்கும் வைரஸ் எனப்படும் எச்.ஐ.வி. (HIV +) பாதித்தவர்கள் என, உலக சுகாதார அமைப்பின் உலக காசநோய் அறிக்கை (GTR) 2018 தெரிவிக்கிறது. தென் ஆப்ரிக்காவில் அனைத்து மருந்து எதிர்ப்பு காசநோயாளிகள் 2.5% (14,000) பேர் உள்ளனர். தென் ஆப்பிரிக்காவில் 2015 வரை எம்.டி.ஆர். டிபி சிகிச்சையின் வெற்றி விகிதம் 54% மற்றும் இறப்பு விகிதம் 20% ஆக இருந்தது என, லான்செட் ஆய்வு தெரிவிக்கிறது. எக்ஸ்.டி.ஆர். காச நோயாளிகளின் வெற்றி விகிதம் 15%; இறப்பு விகிதம் 42% ஆகும்.

நோயாளிகளின் முழு எண்ணிக்கை உயர்ந்ததாக இல்லை என்ற போதும் தென் ஆப்பிரிக்காவில் 1,00,000 க்கு 567 என்ற விகிதத்தில் உள்ளனர். இது பிரேசில், ரஷ்யா, இந்தியா, சீனா, தென் ஆப்ரிக்கா ஆகியன இணைந்த பொருளாதார கூட்டமைப்பான பிரிக்ஸ் நாடுகளில் அதிகபட்சம் என்று ஜி.டி.ஆர். 2018 அறிக்கை தெரிவிக்கிறது. ஆர்.ஆர்./ எம்.டி.ஆர். டிபி ஆகியவற்றில் ரஷ்யாவிற்கு அடுத்து தென் ஆப்பிரிக்கா 1,00,000 பேரில் 25 என, இரண்டாவது இடத்தில் உள்ளது. எச்.ஐ.வி. + காசநோயாளிகளுக்கான நிகழ்வு விகிதம் தென்னாபிரிக்காவில் 100,000 பேருக்கு 345 ஆகும்.

TB Incidence In BRICS Countries, 2017
Country TB cases RR/MDR TB cases TB deaths TB incidence (TB patients per 100,000) RR/MDR TB incidence
India 27,40,000 1,35,000 4,21,000 204 10
South Africa 3,22,000 14,000 78,000 567 25
China 8,89,000 73,000 38,800 63 5.2
Brazil 91,000 2400 7000 44 1.2
Russia 86,000 56,000 11,700 60 39

Source:World Health Organization, Global Tuberculosis report 2018

வழக்கமான சிகிச்சையில் இத்தகைய மோசமான முடிவுகளை எதிர்கொண்ட தென் ஆப்பிரிக்கா, 2013 ஆம் ஆண்டில் பெடாகுலைன் அணுகல் திட்டத்தின் கீழ் எக்ஸ்.டி.ஆர்.முந்தைய மற்றும் எக்.டி.ஆர். காச நோயாளிகளுக்கு என்.டி.சி.பி. சிகிச்சை முறையின் கீழ் புதிதாக பெடாகுலைன் மருந்தை சேர்த்தது. இத்திட்டம், 200 தொகுப்பு பெடாகுலைன் பயன்பாட்டுக்கு வித்திட்டது. இம்மருந்து தென் ஆப்ரிக்காவுக்கு நன்கொடையாக கிடைத்தது.

கெய்லிட்சாவில் உள்ள அரசு சுகாதார மையத்தில், மருந்துக்கு கட்டுப்படாத காசநோய் உள்ள ஒருவருக்கு மருந்து தரும் செவிலியர். 2018 ஜூனில், எம்.டி.ஆர். மற்றும் எக்ஸ்.டி.ஆர். காசநோய்க்கு புதிய மருந்தான பெடாகுலைன் தந்த முதல் நாடு தென் ஆப்ரிக்கா ஆகும்.

“நாங்கள் பெடாகுலைனை பயன்படுத்தினோம், ஏனெனில் மிக மோசமான முடிவுகளே (முந்தைய எம்.டி.ஆர். மற்றும் எக்.ஸி.ஆர். காச சிகிச்சைகள் மூலம்) கிடைத்தன; நாங்கள் அதை கட்டுப்பாட்டு முறையில் பயன்படுத்தினோம்; அது மெதுவாக (நோயாளிகளின் எண்ணிக்கை) அளவிடுகிறது. அது எங்களுக்காக வேலை செய்வதை பார்த்தோம்” என்று, என்.டி.சி.பி. இயக்குனர் நோர்பெர்ட் என்டிஜேகா, இந்தியா ஸ்பெண்டிடம் தெரிவித்தார்.

தென் ஆப்பிரிக்காவின் பந்தயம் வெற்றி பெற்றது. 2012 முதல் 2015 வரையிலான மருந்துகளை வழங்கப்பட்ட முதல் 200 நோயாளிகளின் முடிவு ஊக்கம் அளிக்கின்றன - இறப்பு விகிதம் 50% என்பதில் இருந்து 12.5% ஆக சரிந்ததாக, சுகாதாரத்துறை தெரிவித்தது.

முந்தைய எம்.டி.ஆர். காசநோய் சிகிச்சைகளில் மோசமான முடிவுகளே கிடைத்ததால், புதிய பெடாகுலைன் மருந்தை பயன்படுத்தி நல்ல பலனை கண்டதாக தென் ஆப்ரிக்க சுகாதாரத்துறையின் தேசிய காசநோய் கட்டுப்பாட்டு திட்ட (NTCP) இயக்குனர் நோர்பெர்ட் என்டிஜேகா தெரிவித்தார். "மற்ற தேசிய திட்டங்கள் பெடாகுலைனுக்கு (Bedaquiline) ஒரு வாய்ப்பு தரவேண்டும் என்றார் எண்டிஜேகா.

எக்ஸ்.டி.ஆர். காசநோயாளிகளின் இறப்பை குறைத்த மருந்து (பெடாகுலைன்) ஏன் எம்.டி.ஆர். காசநோயாளிகளுக்கு மறுக்கப்பட்டது என, நோயாளிகளும், ஆலோசனை குழுக்களும் கேட்கத் தொடங்கின; அது மனித உரிமைகள் தொடர்பானது என்று, என்டிஜேகா கூறினார்.

இம்முடிவுகள் தென் ஆப்பிரிக்காவை உயர்த்தும் நம்பிக்கையை அளித்தன. 2015 மார்ச் முதல், இரண்டாம் வரிசை மருந்து எதிர்ப்பு கொண்ட காசநோயாளிகளுக்கு என்.டி.சி.பி.யில் பெடாகுலைன் மருந்து பயன்படுத்தப்படுகிறது.

தென் ஆப்ரிக்கா எக்ஸ்.டி.ஆர். மற்றும் எம்.டி.ஆர். டிபி இரண்டிற்கும் பெடாகுலைனை பயன்படுத்துகிறது; WHO பின்பற்றுகிறது

கடந்த 2014 முதல் 2016 வரையிலான முந்தைய ஆய்வின்படி சிகிச்சை பெற்ற 19,000 நோயாளிகள், மருந்துக்கு கட்டுப்படாத காசநோயாளிகள், பெடாகுலைன் சிகிச்சை முறைகளுக்கு உட்பட்டிருந்தனர் என்று, தி லான்செட் 2018 ஜூலையில் கட்டுரை வெளியிட்டிருந்தது. தென் ஆப்ரிக்கா எலெக்ட்ரானிக் மருந்து தடுப்பு காச நோயாளர் பதிவு (EDRweb) மற்றும் தேசிய முக்கிய புள்ளியியல் பதிவுகளில் இருந்து இறப்பு தரவு, ரிபாம்பிசின் எதிர்ப்பு நோயாளிகள் தரவைப் பொருத்தும்போது இது தெளிவாகிறது. நிலையான எம்.டி.ஆர். டிபி நோயாளிகளின் (25%)இறப்பு விகிதத்துடன் ஒப்பிடும் போது, பெடாகுலைன் பெறுவோரில் இறப்பு விகிதம் (13%) குறைந்துள்ளது. எக்ஸ்.டி.ஆர். டிபி இறப்பு வீதம் கிட்டத்தட்ட மூன்றில் ஒரு பங்கு - 15% - பெடாகுலைன் பயன்படுத்தும் குழுவிலும், 40% நிலையான ஒழுங்குமுறைக் குழுவிலும் என்றளவில் உள்ளது.

2018 ஜூனில், எம்.டி.ஆர். மற்றும் எக்ஸ்.டி.ஆர். காசநோயாளிகளுக்கு புதிய மருந்தான பெடாகுலைன் தந்த முதல்நாடு என்ற சிறப்பு தென் ஆப்ரிக்கா பெற்றது. காதுகேளாமை, சிறுநீரகம் செயலிழப்பு, உளவியல் பிரச்சனை போன்ற பக்க விளைவுகளை கொண்ட ஊசிமூலம் மருந்து செலுத்தும் முறைக்கு மாற்றாக, வாய்வழியாக மருந்து செலுத்தும் முறைக்கு மாறியது குறித்து, 2018 ஆகஸ்ட் இந்தியா ஸ்பெண்ட் கட்டுரை தெரிவித்திருந்தது.

இம்முடிவு உடனடியாக வல்லுநர்கள் மற்றும் மக்கள் சமுதாயத்தால் பாராட்டப்பட்டது. "காசநோய் சிகிச்சை உருவாக்குவதில் தென் ஆபிரிக்கா தலைமையானது, நம் அனைவருக்கும் ஒரு உத்வேகமாக இருக்க வேண்டும்; இது காசநோயை முடிவுக்கு கொண்டு வருவதை நோக்கமாகக் கொண்டது; புதுமை ஏற்றுக் கொள்ளப்பட்டால் மட்டுமே இது சாத்தியமாகும்" என்று, கயெலிட்சாவில் உள்ள எம்.எஸ்.எப். இன் எம்.டி.ஆர். டிபி கிளினிக் தலைவரும், தென் ஆப்பிரிக்க தேசிய மருத்துவ ஆலோசனைக்குழு உறுப்பினருமான அஞ்சா ரெய்டர் எழுதியதாக, தி லான்செட் சுவாச மருத்துவ இதழ், 2018 ஜூலையில் தெரிவித்திருந்தது.

தென் ஆப்ரிக்காவில் 2018 ஆகஸ்ட் வரை, 16,800 எம்.டி.ஆர். டிபி மற்றும் எக்ஸ்.டி.ஆர். டிபி நோயாளிகளுக்கு பெடாகுலைன் மருந்து வழங்கப்பட்டது; இது உலகளவில் வழங்கப்பட்ட இம்மருந்துகளில் மூன்றில் இரண்டு பங்கு என, உலகளாவிய காசநோய் மருந்து தடுப்பு அமைப்பு தெரிவிக்கிறது.

"தென் ஆப்பிரிக்கா பயன்படுத்தும் அணுகுமுறை, வலுவான மருந்துகளை வெளியேற்றுவது தான்" என்று, இந்தியா ஸ்பெண்டிடம் ரெய்டர் தெரிவித்தார். எனவே, பரவலாக்கம் முதலில் குறைந்து, பின்னர் நிகழ்வு, இறப்பு மற்றும் நோயுற்றதன்மையும் குறையும்.

"தென் ஆப்பிரிக்கா பயன்படுத்தும் அணுகுமுறை, வலுவான மருந்துகளை வெளியேற்றுவது தான்”. இதனால் முதலில் பரவலாக்கம் குறைந்து, பின்னர் நிகழ்வு, இறப்பு மற்றும் நோயுற்றதன்மையும் குறையும் என, கயெலிட்சாவில் உள்ள எம்.எஸ்.எப். இன் எம்.டி.ஆர். டிபி கிளினிக் தலைவர் அஞ்சா ரெய்டர் தெரிவித்தார்.

தென் ஆப்பிரிக்காவிற்கு பின் இரண்டு மாதங்கள் கழித்து, 2018 ஆகஸ்டில் உலக சுகாதார அமைப்பு, மருந்துக்கு கட்டுப்படாத காசநோய்க்கான ஒரு முன்னணி மருந்தாக பெடாகுலைனை பரிந்துரைத்தது; இது முழுமையான ஒரு வாய்வழி மருந்து என்ற முன்னுரிமையை தந்தது. தென் ஆப்ரிக்காவின் அனுபவம் உட்பட பல ஆராய்ச்சி ஆய்வுகள் அடிப்படையில், 2018, டிசம்பர் 21ஆம் தேதி இந்த வழிகாட்டுதல்களை உலக சுகாதார அமைப்பு நிறைவு செய்தது.

உலகின் பிற பகுதிகளில் இது குறித்து புதிதாக ஆரம்பிக்கப்பட வேண்டியதில்லை; தென் ஆப்பிரிக்காவின் இந்த படிப்பினைகளையே செயல்படுத்தலாம். மருந்துக்கு கட்டுப்படாத காசநோய்க்கு பெடாகுலைனை உலக சுகாதார அமைப்பு பரிந்துரை செய்ததன் மூலம், ஏற்கனவே உள்ள பாதுகாப்பு, செயல் திறன் கவலைகள் தள்ளிப் போயுள்ளன. “இந்தியா, சீனா, ரஷ்யா, பிரேசில் மற்றும் எந்தவொரு எம்.டி.ஆர். காசநோய் சுமைகளை கொண்ட நாட்டையும் இம்மருந்தை பயன்படுத்த அழைக்கிறோம்” என்று என்டிஜேகா தெரிவித்தார். இதில் எந்தவொரு நாடும் 80 - 90% வெற்றியை கொண்டிருக்கக்கூடும்; அதை அடைய இம்மருந்து உதவும் என்று அவர் மேலும் கூறினார்.

தற்போது இந்தியாவில் பெடாகுலைன், டிலாமனிட் ஆகியன, அரசு நடத்தும் மையங்கள் மூலம் குறைந்த அளவில் கடும் கட்டுப்பாடுகளுடன் எக்ஸ்.டி.ஆர். காசநோய்க்கு முந்தைய மற்றும் எக்ஸ்.டி.ஆர். காச நோயாளிகளுக்கு தகுதி அடிப்படையில் வழங்கப்படுகிறது. மருந்துகளுக்கு எதிர்ப்பு வளரும் என்ற நோயாளிகளின் அச்சத்துக்கு மத்தியில் இம்மருந்துகளை அணுகுவதற்கு அரசு கண்டிப்பாக கட்டுப்படுத்துகிறது. இந்தியாவில் இம்மருந்துகள் போதுமான அளவு இருப்பு வைத்திருக்கவில்லை என்பது இந்தியா ஸ்பெண்ட் ஆய்வு தெரிவிக்கிறது.

"ஒவ்வொரு ஆண்டும் அரை மில்லியன் பேர் மருந்துக்கு கட்டுப்படாத காசநோயாளிகளாக கண்டறியப்படுகின்றனர். இப்போது ஒரு நெருக்கடி தெளிவாக உள்ளது; முகம் தெரியாத வருங்கால மக்கள் இந்த நெருக்கடியை எதிர்கொள்ள, பயனுள்ள மருந்துகளை ஒதுக்கி வைக்கும் நெறிமுறை கேள்விக்குரியது "என்று ரெய்டர் கூறினார்.

எச்.ஐ.வி.க்கு எதிரான போராட்டத்தின் படிப்பினைகள் தென் ஆப்பிரிக்காவுக்கு ஒரு செயல்திறன் மிக்க காசநோய் கொள்கையை உருவாக்க உதவியது

தென் ஆப்ரிக்காவின் 5.77 கோடி மக்கள் தொகையில் 75 லட்சம் பேர் - அல்லது 13.1% பேர் எச்.ஐ.வி.யால் பாதிக்கப்பட்டவர்கள். தென் ஆப்பிரிக்காவில் தற்போது பெரிய தேசிய ரெட்ரோ எதிர்ப்பு வைரஸ் சிகிச்சை திட்டம் -ஏஆர்டி ( எச்.ஐ.விக்கு சிகிச்சையளிக்க பயன்படுத்தப்படும் மருந்துகள்); இதன் கீழ், 2018ஆம் ஆண்டில் 45 லட்சம் எச்.ஐ.வி.+ நோயாளிகளுக்கு மருந்து தரப்பட்டது; ஆனால் இதை அமைப்பதற்கான பாதை சவாலாக இருந்தது.

எச்.ஐ.வி.யானது எய்ட்ஸ்க்கு காரணமாகாது என்று அறிக்கை விட்டு மக்களை தவறாக வழிநடத்திய தலைவர்கள்; மற்றும் உயிர்காக்கும் ஏ.ஆர்.டி. மருந்தை அனுமதிக்காத தேசிய கொள்கை ஆகியன விலையுயர்ந்ததாக கருதப்பட்டன. இறுதியில் விஷயங்கள் 2013ல் தொடங்கின; எனினும் ஏ.ஆர்.டி.யின் அதிகரிப்பு மெதுவாகவே இருந்தது. இது, நோயாளிகள் மற்றும் மனித உரிமைகள் குழுக்களின் பெரிய அளவிலான ஆர்ப்பாட்டங்களுக்கு வழிவகுத்தன.

சிகிச்சை நடவடிக்கை கூட்டணி போன்ற சிவில் சமூக அமைப்புக்கள், எச்.ஐ.வி சிகிச்சைக்கான தடைகளுக்கு எதிராக பொதுமக்களுக்கு அழுத்தம் தருவதில் முக்கிய பங்கு வகிக்கின்றன. சிவில் சமூக கூட்டணி காட்டிய இந்த வேகம் காசநோய் சிகிச்சையைச் சுற்றியுள்ள பிரச்சனைகளை முன்னிலைப்படுத்த உதவியது; மேலும் செயல்திறமிக்க பாத்திரத்திற்கு தென் ஆப்ரிக்கா அரசு பொறுப்பாக செய்வதில் பங்கு வகித்தது.

தென் ஆப்பிரிக்காவின் கொள்கைகளில் நிறைய மாற்றங்கள் ஏற்பட காரணமாக இருந்த பெருமை, 2009 ஆம் ஆண்டு முதல் சுகாதாரத்துறை அமைச்சரான பக்‌ஷி ஆரோன் மொட்சொலெடி ஒருவரையே சேரும். அவரது பதவிக்காலத்தில் நாடு தழுவிய எச்.ஐ.வி. கண்டறிந்து சிகிச்சை அளிக்கும் பணி மேற்கொள்ளப்பட்டது; எய்ட்ஸ் நோயால் இறப்போர் எண்ணிக்கையும் குறைந்தது.

காசநோய் திட்டங்களை செயல்படுத்த ஐக்கிய நாடுகள் (ஐ.நா) அமைப்பால் ஏற்படுத்தப்பட்ட காசநோய் தடுப்பு கூட்டுக்குழுவின் தலைவராகவும் மொட்சொலெடி இருந்துள்ளார். அவரது தலைமையின் கீழ், பல்வேறு காசநோய் தடுப்பு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. காசநோய்க்கான ஆரம்ப ஆய்வான காட்ரிட்ஜ் அடிப்படையிலான நியூக்ளிக் அமிலம் ஆம்ப்ளிபிகேஷன் (பரவலாக மரபணு எக்ஸ்பெர்ட்) சோதனை, எச்.ஐ.வி. நோயாளிகளுக்கான காசநோய் பரிசோதனையான சிறுநீர் கொழுப்பு அமிலம் (LAM) சோதனை, காசநோய்க்கு ஊசிமூலம் மருந்து உள்ளிட்டவை அதில் அடங்கும்.

2018 செப்டம்பரில் காசநோய் தொடர்பாக ஐ.நா.வில் உயர்மட்ட கூட்டத்திற்கு ஏற்பாடு செய்து, காசநோய்க்கு எதிரான உலகளவில் அரசியல் ஆதரவை மொட்சொலெடி திரட்டினார்; இவ்வாறு ஐ.நா.வை வலியுறுத்துவதன் மூலம், இந்நோய் பற்றி உலக நாடுகளின் தலைவர்களால் விவாதிக்கப்படலாம். சுகாதாரம் தொடர்பாக இத்தகைய அரிதான கூட்டம் ஐ.நா. நடப்பது இது ஐந்தாவது முறையாகும்.

2018 ஜூலையில் தென் ஆப்பிரிக்காவும் "தைரியமான" ஒரு முடிவை எடுத்தது; காசநோய் குறித்த ஐ.நா.வின் அரசியல் பிரகடனத்தின் வரைவு பற்றிய உரை மீது ‘தனது மவுனத்தை உடைத்தது'. அது முந்தைய ஐ.நா. அறிக்கைகள் மற்றும் 'ஆரோக்கியம்', மருந்துகள் மீதான அணுகல் ஆகியவற்றை பெரிதும் வலுவிழக்க செய்தது. தங்களின் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டிற்கான செலவில் இருந்து மருந்துகளின் விலையை பிரிப்பதில் நெகிழ்வுத்தன்மையை கொண்டிருந்தது. இத்தகைய நெகிழ்வுத்தன்மையால் ஏ.ஆர்.டி. விலை, 2000ல் இருந்து 96% சரிந்தது; உலகிலேயே மிகப்பெரிய ஏ.ஆர்.டி. திட்டத்தை உருவாக்க தென் ஆப்பிரிக்காவை அனுமதித்தது. இதுபற்றிய இறுதி கொள்கை ஆவணம், வர்த்தக நெகிழ்வுத்தன்மையை குறைக்கவில்லை.

நன்கொடையாக பெறப்பட்ட 200 தொகுதி பெடாகுலைன் மருந்து பயன்பாட்டுக்கு பின் தென் ஆபிரிக்கா, அதன் தயாரிப்பாளர்களான ஜான்சென் நிறுவனத்திடம் இருந்து நேரடியாக மருந்துகளை வாங்குவதற்கு முடிவு செய்தது; இந்தியா உட்பட மற்ற நாடுகளை போல் நன்கொடைகளை சார்ந்திருக்கவில்லை. தென் ஆப்ரிக்க அரசு பெடாகுலைன் மருந்து விலையை 750 டாலரில் (ரூ. 52,550) இருந்து, 400 டாலர் (ரூ. 28,029) என்று ஆறு மாதங்களுக்கு குறைக்க ஜான்சென் நிறுவனத்திடம் 2018 ஜூலையில் பேச்சு நடத்தியது. இது தென் ஆப்பிரிக்க அரசுக்கு 36 மில்லியன் டாலர்களை (ரூ.252 கோடி) சேமிக்க உதவியதோடு மட்டுமின்றி, மற்ற நாடுகளுக்கு போதிய மருந்து வழங்க உதவியது.

2018 அக்டோபரில், "காசநோயை முடிவுக்கு கொண்டு வர சிறந்த தலைமையாக பணியாற்றியது” என்பதற்காக, 2018 கொச்சோன் விருதுக்கு மொட்சொலெடிக்கு வழங்கப்பட்டது.

ஒரு புதிய மருந்து வழங்கப்பட்டபோது, தென்னாப்பிரிக்கா அதற்கான ஆதாரங்களை சேகரித்ததுடன், அதை மேலும் நோய்க்கு கட்டுப்படாத காச நோயாளிகளுக்கு கொடுக்கும் வழிகளை கண்டது. அவர்கள், பெடாகுலைனை 2013ல் பயன்படுத்த தொடங்கினர்; இம்மருந்தை பரிந்துரைக்கும் அளவுக்கு டாக்டர்கள், செவிலியர்களின் பணித்திறன் மேம்படுத்தியுள்ளனர்; ஏனெனில் இம்மருந்து உயிரை காக்கிறது.

"மருந்துக்கு கட்டுப்படாத பெடாகுலைன் மருந்தை உட்செலுத்துவது மற்ற மருந்துகளை விடவும் எளிது; சுலபமாகவும் பொறுத்துக் கொள்ளலாம். மற்ற நாடுகளின் தேசிய திட்டங்களும் இதை (பெடாகுலைன்) தருவதற்கான வாய்ப்பை ஏற்படுத்த வேண்டும்; ஏனெனில் தலையீட்டுக்கு ஒரு வாய்ப்பு தந்தாக வேண்டும்” என்று என்டிஜெகா இந்தியா ஸ்பெண்டிடம் தெரிவித்தார்.

Fighting Drug-Resistant TB: From Evidence To Implementation In South Africa

Several initiatives helped South Africa implement its innovative policies and become a world leader in fighting drug-resistant TB.

Decentralisation of treatment: After the policy of keeping MDR-TB patients hospitalised for the duration of their treatment showed poor results, drug-resistant TB therapy has been decentralised.

Each district in South Africa’s nine provinces has a drug-resistant TB treatment site with trained doctors, nurses and clinic practitioners, pharmacy and laboratory facilities. These centres also have facilities for ECG tests and audiometry to test hearing.

NTCP director Ndjeka informed IndiaSpend that 86% of the total 253 sub-district centres in the country have begun bedaquiline treatment.

To help doctors in these centres familiarise themselves with the new drug, doctors who found patients eligible for bedaquiline filled in a form and sent it to the national clinical advisory committee. These experts advised them on which treatment regimen to use. This worked well as doctors could directly discuss patients with the foremost experts in the country. After 2015, these centres did not need much more hand-holding by experts.

Each province uses social media and a WhatsApp group of primary physicians and chest physicians to get a direct expert opinion on complicated cases. This has scaled up usage of bedaquiline, said Ndjeka.

Identification and treatment: South Africa also detected populations including mining industry workers, inmates of correctional facilities such as prisons and six districts as vulnerable to TB, and developed a strategy to screen them for the disease. While mining companies were told to conduct screenings for their workers, all prisoners were then tested four times--when entering and leaving correctional facilities and twice while inside.

TB Think Tank: To get technical advice suited for its own population in a timely way, the NTCP set up a think tank in 2014. The TB think tank, as it was called, comprised researchers, government officials and members of civil society. It had three working groups for modernising TB response, delivery and implementation and new drugs and diagnostics.

Since then, the think tank has issued guidance such as securing domestic funding of $27 million (Rs 189 crore) for TB treatment, recommending a preventive strategy of using isoniazid for nine months to treat latent TB, and using a short-course bedaquiline treatment (9 months vs 24 months) for MDR-TB, among others.

Clinical Trials: South African patients have also been part of a number of clinical trials including NiX Trial, which covered all oral drugs including bedaquiline, pretomanid and linezolid for 6-9 months for XDR-TB patients; EndTB trial by MSF at Khayelitsha, which also included all oral and short regimens with bedaquiline and delamanid; and STREAM 2 trial, which had to be discontinued because it still involved injectable drugs which are no longer used in the country.

Testing for bedaquiline resistance: South Africa has shown foresight in beginning a bedaquiline resistance surveillance programme that collects routine samples of patients started on bedaquiline from various sites and tests them for resistance. A study published by researchers at the National Institute for Communicable Diseases (NICD) and the department of health defined the criteria used during the surveillance for detecting resistance to bedaquiline. These criteria became part of the WHO’s policy guidance for laboratories across the world.

The surveillance has found that less than 1% of patients showed genetic markers for resistance to bedaquiline. While resistance observed during the surveillance is a cause for concern, it is not surprising since the patients surveilled were primarily XDR-TB patients, with few effective drugs left for treatment. “Ideally, you need 3-5 drugs to fight the disease and prevent resistance. We observed that patients on a sub-optimal regimen with only 1 or 2 effective drugs along with bedaquiline were more likely to develop bedaquiline resistance,” said Nazir Ismail, head of the centre for tuberculosis at NICD.

With the wider use of bedaquiline to treat all MDR-TB patients in the national programme, the risk of bedaquiline resistance will be lower as long as adherence is good, said Ismail.

இத்தொடர் நிறைவுற்றது. இதன் முதல் பகுதியை நீங்கள் இங்கே படிக்கலாம்.

(யாதவர், இந்தியா ஸ்பெண்ட் முதன்மை செய்தியாளர்.)

யாதவர், 2018ல் எம்.எஸ்.எப். ஊடகவியலாளராக இருந்தவர். இறுதி அறிக்கையில் எம்.எஸ்.எப். எந்த மேற்பார்வை அல்லது தலையங்க கட்டுப்பாட்டையோ கொண்டிருக்கவில்லை.

உங்களின் கருத்துகளை வரவேற்கிறோம். கருத்துகளை respond@indiaspend.org. என்ற முகவரிக்கு அனுப்பலாம். மொழி, இலக்கணம் கருதி அவற்றை திருத்தும் உரிமை எங்களுக்கு உண்டு.

Next Story