இரு முக்கிய உடல்நல தரவுகள் வேறுபடுகின்றன, மாநிலங்களின் தவறான அறிக்கைகளும் வெளிப்படுகின்றன

Update: 2019-05-17 01:30 GMT

புதுடெல்லி: பொதுநல சுகாதாரம் மீதான இந்தியாவின் முன்னேற்றம் கடந்த பத்தாண்டுகளில் அதன் பொருளாதார வளர்ச்சியை தக்கவைக்கத் தவறிவிட்டது, பொருளாதாரம் மீது ஒரு பிணை கட்டுப்பாட்டை வைக்கிறது என்று, நிதிஆயோக் 2018 அறிக்கையான 'ஆரோக்கியமான மாநிலங்கள், முன்னேறும் இந்தியா' (Healthy States, Progressive India) தெரிவிக்கிறது.

மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்கள் (UTs) மீதான ஒரு ஆரோக்கியமான குறியீட்டுடன் இந்தியாவின் பொருளாதார முன்னேற்றம் மற்றும் சாதனைகள் ஒப்பிடுகையில், ஆரோக்கியமான விளைவுகளை மேம்படுத்துவதற்கான அதன் சுகாதார செலவின விகிதங்களை ஒப்பிடும்போது, வளரும் நாடுகளில் காணப்படுவதைவிட குறைவாகவே உள்ளது. இது, நடுத்தர வருவாய் பொறி குறித்து, பிரதமர் பொருளாதார ஆலோசனைக் குழுவின் உறுப்பினர் சமீபத்தில் எச்சரித்தபடி, இந்திய பொருளாதாரத்தின் அடிப்படை அபாயங்களாகும்.

சுகாதார துறையில் ஆட்சி நிர்வாக பற்றாக்குறையானது, முக்கியமாக குறைந்த பொது முதலீட்டின் விளைவாக இருக்கும்போது, பிரச்சனைகள் வழக்கமான, தரம் பற்றாக்குறையால் அதிகரிக்கிறது. அது, முடிவெடுப்பதைத் தெரிவிப்பதோடு துணை மாவட்ட அளவில் நிச்சயமாக திருத்தம் செய்யலாம்.

அரசின் சுகாதார மேலாண்மை தகவல் அமைப்பு -எச்.ஐ.எம்.எஸ். (HMIS), பெரும்பாலும் துணை மாவட்ட அளவில் சுகாதாரத் தரவிற்கான ஒரே ஆதாரமாக உள்ளது, இது பிரச்சினைகள் நிறைந்ததாகும். நாட்டில் மலேரியாவின் இறப்பு எண்ணிக்கை மதிப்பிட்டதைவிட, குறைந்தபட்சம் 20-30 மடங்கு அதிகமாக இருக்கும் என்று, 2013இல் ஒரு அரசு குழு அறிக்கையில் கண்டறியப்பட்டது. 2015 ஆம் ஆண்டில், இந்தியாவில் 2014 ஆம் ஆண்டுடன் (220,000) ஒப்பிடும்போது காசநோய் (TB) மதிப்பிடப்பட்ட இறப்பு எண்ணிக்கை இரட்டிப்பாக (480,000) இருக்க வேண்டும்.

இன்றோ, முன்எப்போதும் இருப்பதை விட, சிறந்த அளவீடு, அதிகமான ஆதாரங்கள் மற்றும் தகவல் அறியும் அறிக்கை ஆகியவை வாக்காளர் விழிப்புணர்வை ஏற்படுத்துகின்றன; மற்றும் ஆழமான கொள்கை விவாதங்களை விரிவுபடுத்துகின்றன. பொது சுகாதாரம் தரவுகளின் தரத்தை மேம்படுத்துவதற்கு இது மத்திய மற்றும் மாநில அரசாங்கங்களுக்கு அவசியமானது என்று, இந்தியா ஸ்பெண்ட் பார்வையாளர் ஆராய்ச்சி அறக்கட்டளை- ஓ.ஆர்.எப். (IndiaSpend - Observer Research Foundation - ORF) தொடரில் இந்த மூன்றாவது அறிக்கையில் நாங்கள் வாதிடுகிறோம்.

சுதந்திரமாக நடத்தப்பட்ட தேசிய குடும்ப சுகாதார கணக்கெடுப்பு -4 (2015-16) இந்தியாவின் நோய்த்தடுப்பு பாதுகாப்புத் திட்டத்தை 62% என்று காட்டியது; பல மாநிலங்களின் செயல்திறன் உண்மையில் மோசமாக இருந்தது. ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு (2014-15), எச்.எம்.ஐ.எஸ். முழுமையாக நோய்த்தடுப்புடைய குழந்தைகள் சதவீதம் 100 க்கும் மேலாக தொடர்ந்து இருக்க வேண்டும் என்று சுட்டிக்காட்டியதாக, பார்வையாளர் ஆராய்ச்சி அறக்கட்டளை தெரிவித்தது.

நிதி உடல்நலம் குறியீடு (The Niti Health Index), மாநில அளவில் சேகரிக்கப்பட்ட உத்தியோகபூர்வ தரவுகளின் தரம் உட்பட எச்.எம்.ஐ.எஸ்.தரவு சதவீதம் பெறுவதன் மூலம், என்.எப்.எச்.எஸ். -4 தரவில் இருந்து அதன் தரம் மதிப்பீடு மற்றும் ஒற்றுமையை மதிப்பிடுவதற்காக, இந்த ஆளுமை பற்றாக்குறை பற்றிய விவாதத்தை ஆய்வு செய்தது. குறிப்பாக, முதல் மூன்று மாதங்களுக்குள் பதிவு செய்யப்பட்ட நிறுவன விநியோகங்களின் விகிதாசாரம் (மக்கள் வீடுகளுக்கு எதிரான சுகாதார வசதிகளில் பிறந்தவர்கள்) மற்றும் பிறப்பு / நடப்பு / கர்ப்ப பரிசோதனை (ANC) விகிதத்தில் எச்.எம்.ஐ.எஸ். (2011-12 முதல் 2015-16 வரை) என்.எப்.எச்.எஸ். -4 உடன் 2015-16ல் நடத்தியதுடன் ஒப்பிடப்பட்டது. தாய்மை மற்றும் குழந்தை சுகாதார நிலைமைகளுக்கு சுகாதார அமைப்பின் அக்கறையை அவர்கள் உணர்ந்திருப்பதால் இந்த குறிகள் தேர்ந்தெடுக்கப்பட்டன.

எச்.எம்.ஐ.எஸ். மற்றும் என்.எப்.எச்.எஸ்.- 4 தரவு, மருத்துவமனை பிரசவங்கள் இடையில் உள்ள முரண்பாடுகளின் அடிப்படையில், இந்திய மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்கள் (UT) முழுவதும் பரவலான வேறுபாடு வரைபடம் 1 காண்பிக்கிறது.

எச்.எம்.ஐ.எஸ்.தரவரிசையில் 10 சிறந்த மாநிலங்களில் எட்டு, தற்போது பாரதிய ஜனதா கட்சி மற்றும் கூட்டணிக் கட்சிகள் (பா.ஜ.க. +) ஆட்சியில் கீழ் உள்ளதாக, நிதி உடல்நலம் குறியீட்டு ஒப்பீடு காட்டியது.

உத்தரப்பிரதேசம் (பா.ஜ.க +), நாகலாந்து (பா.ஜ.க. +) மற்றும் புதுச்சேரி (இந்திய தேசிய காங்கிரஸ் மற்றும் கூட்டணி அல்லது ஐ.என்.சி. +) ஆகியன எச்.எம்.ஐ.எஸ். மற்றும் என்.எப்.எச்.எஸ்.-4 தரவரிசைகளுக்கு இடையில் பரவலான முரண்பாடுகளை கொண்டுள்ளன.

கீழே உள்ள 10 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேச சட்டசபைகளில் நான்கை காங்கிரஸ் மற்றும் கூட்டணி கட்சிகள், தலா மூன்று பா.ஜ.க. அல்லது பிராந்தியக் கட்சிகள் அல்லது கூட்டணிக் கட்சிகள் வசம் உள்ளன.

Source: Healthy States, Progressive India, 2018

முதல் மூன்று மாதங்களுக்குள் பதிவுசெய்யப்பட்ட ஏ.என்.சி. பதிவுகளில், வரைபடம் 2 இல் குறிப்பிடப்பட்ட நாகாலாந்து (பாஜக), ஜார்கண்ட் (பாஜக +) மற்றும் புதுச்சேரி (காங்கிரஸ் +) ஆகியவற்றில் எச்.எம்.ஐ.எஸ் மற்றும் என்.எப்.எச்.எஸ். -4 தரவரிசைகளின் பரவலான வேறுபாட்டை காட்டுகின்றன.

உத்தரப் பிரதேசம் (பா.ஜ.க.+), ஏ.என்.சி. பதிவு தரவுகளின் நம்பகத்தன்மையில் முதலிடத்தில் இருந்தது; மருத்துவமனை பிரசவங்களின் தரத்தின் தரம் அடிப்படையில் கீழிலிருந்து மூன்றாவது வரிசையில் உள்ள மாநிலங்களில் இதுவும் ஒன்று.

இருப்பினும், ஏ.என்.சி. பதிவு பற்றிய தரத்தின் தரம் அடிப்படையில் மூன்று செயல்பாட்டாளரில் நாகலாந்து (பா.ஜ.க. +) மற்றும் புதுச்சேரி (ஐ.என்.சி.+) ஆகிய நிறுவனங்களின் தரவரிசைகளில் இருந்து இரண்டும் அடங்கும். இங்கே, தற்போது பாஜக மற்றும் கூட்டணியில் கீழ் உள்ள மாநிலங்கள் மற்றும் யூனியங்கள், எச்.எம்.ஐ.எஸ். தரவின் நம்பகத்தன்மையைப் பொறுத்தவரையில், சிறந்த 10 செயல்பாட்டாளர்கள் என்று ஆதிக்கம் செலுத்துகின்றன; ஏழு மதிப்பீடுகளை கொண்டுள்ளன. குஜராத் (பாஜக +) மற்றும் மகாராஷ்டிரா (பாஜக +) இரு தரவரிசைகளிலும் முதல் மூன்று இடங்களின் ஒரு பகுதியாக விளங்குகின்றன.

Source: Healthy States, Progressive India, 2018

வரைபடம் 3 காட்டுவது, மாவட்ட அளவிலான அரசு சுகாதாரத் தலைமையின் சராசரியான ஆக்கிரமிப்பு பற்றிய நிதி உடல்நலம் குறியீட்டு தரவு, மாநிலங்களில் மூன்றில் ஒரு பகுதியிலும், ஒரு முழுநேர தலைமை மருத்துவ அதிகாரி (CMO) அல்லது மாவட்ட சுகாதார சேவைகள் தலைமையிலான சமமான பதவிக்கு 12 மாதங்கள் அல்லது அதற்கு குறைவாக இருக்கும் சராசரி ஆட்குறைப்பு என்பதால் திட்டங்கள் திறம்பட செயல்படுத்தப்படுவதை தடுக்கிறது. குறைந்த எண்ணிக்கையிலான மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களே - மிசோரம் (மிசோ தேசிய முன்னணி மற்றும் கூட்டணி, அல்லது எம்என்எஃப் +),சிக்கிம் (பாஜக +), சத்தீஸ்கர் (காங். +), புதுச்சேரி (காங். +) 24 மாதங்களுக்கும் மேலாக சராசரியாக இருந்து வந்ததாக அறிவிக்கப்பட்டது.

Source: Healthy States, Progressive India, 2018

சுகாதார அமைப்பு வளர்ச்சியின் நீண்டகால முன்னோக்குடன், மத்திய மற்றும் மாநில அரசுகள், மாவட்ட மட்டத்தில் சுகாதார துறை தலைமை மாற்றம் ஒரு ஊக்குவிப்பு ஒரு கடமையை நிலையத்தில் போதுமான நீண்ட நேரம் செலவிடப்படுகிறது என்பதை உறுதி செய்ய வேண்டும்.

நிதி உடல்நலம் குறியீடு மேலும் துணை-தரவரிசை தரவரிசைகளை வழங்கியது; ஏனெனில் ஒட்டுமொத்த செயல்திறன் மேலும் கவனத்தை தேவைப்படும் குறிப்பிட்ட பகுதிகளை வெளிப்படுத்தாது. உண்மையில், மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்கள் ஆட்சி மற்றும் தகவல் துணை மதிப்பெண்கள் மற்றும் தரவரிசைகள் ஒட்டுமொத்த சுகாதார குறியீட்டின் அடிப்படையில் தங்கள் மதிப்பெண்களிலும் தரவரிசையில் இருந்தும் வேறுபடுகின்றன.

குறிப்பாக தென்னிந்திய மாநிலங்களின் ஒட்டுமொத்த சுகாதார குறியீட்டில் 'ஆட்சி' மற்றும் 'தகவல்' ஆகியவற்றின் மீதான கள-குறிப்பிட்ட செயல்திறன் ஈர்ப்பதாக இல்லை என்பது நன்றாகவே தெரியும்.

Source: Healthy States, Progressive India, 2018

வரைபடம் 4 ஆனது, ஒட்டுமொத்த செயல்திறன் குறியீட்டில் மிக உயர்ந்த இடத்தை வகிக்கும் கேரளா (சி.பி.ஐ.எம். +) உட்பட தென்னிந்திய மாநிலங்கள் ஆளுமை மற்றும் தகவல் அளவுகோலில் ஒப்பீட்டளவில் மோசமாக செய்யப்படுகிறது. இது அவர்களின் சுகாதார மேலாண்மை தகவல் அமைப்புகளால் சேகரிக்கப்பட்ட தரவுகளின் தரம் உட்பட, மாநிலங்களில் சுகாதார நிர்வாக அமைப்புகளின் தரத்தையும் கேள்விக்குள்ளாக்குகிறது.

காலநிலைமை, துல்லியம் மற்றும் பொருத்தம் ஆகியவற்றிற்கு சுகாதாரத் தரவுத் தரத்தை மேம்படுத்த அவசரத் தேவை உள்ளது. இந்த அமைப்புகளின் ஒட்டுமொத்த செயல்திறன் உயர் தர தகவல் மற்றும் ஆளுமை நடைமுறைகளுக்கு உத்தரவாதமளிக்கவில்லை என்பதை நிதி உடல்நலம் குறியீடு தெளிவுபடுத்துகிறது. பெரிய மாநிலங்களில் குஜராத் (பா.ஜ.க. +) மற்றும் மகாராஷ்டிரா (பா.ஜ.க. +) இவற்றில் விதிவிலக்காக உள்ளன.

இக்கட்டுரை முதலில் இங்கு சுகாதாரம் சரிபார்ப்பு (HealthCheck) இணையதளத்தில் வெளியிடப்பட்டது.

(குரியன், சுகாதார முன்முயற்சியில் உள்ள அப்சர்வர் ஆராய்ச்சி அறக்கட்டளையை சேர்ந்தவர்).

உங்களின் கருத்துகளை வரவேற்கிறோம். கருத்துகளை respond@indiaspend.org. என்ற முகவரிக்கு அனுப்பலாம். மொழி, இலக்கணம் கருதி அவற்றை திருத்தும் உரிமை எங்களுக்கு உண்டு.

Load more